மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

சென்னை உயர்நீதிமன்றம்: நம்பிக்கை வாக்கெடுப்பு காட்சிப்பதிவை ஸ்டாலினிடம் அளிக்க வேண்டும்



Mar 10, 2017

கடந்த பிப்ரவரி மாதம் 18ம் தேதி முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்புக்கு கோரினார். அப்போது ரகசிய வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்று திமுக வலியுறுத்தியது.

Siragu assembly1

ரகசிய வாக்கெடுப்பை நிராகரித்த சபாநாயகர் தனபால், சட்டசபையில் அமளி ஏற்படுத்திய திமுக எம்.எல்.ஏ-க்கள் வெளியேற்றப்பட்டனர். பின் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட்டு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வெற்றிபெற்றதாக அறிவித்தார்.

சட்டசபையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பு முறைக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டது. கடந்த வாரம் இவ்வழக்கின் விசாரணையில் சட்டசபையில் நடந்த சம்பவங்கள் தொடர்பான காட்சிகளை தாக்கல் செய்ய வேண்டும் என்று ஸ்டாலினுக்கு உத்தரவிட்டனர். மேலும் முதல்வர், சபாநாயகர், ஆளுநரின் செயலர், தலைமைச் செயலர் போன்றோர் பதிலளிக்க வேண்டும் என்று நோட்டிஸ் அனுப்பியது உயர்நீதிமன்றம். இவ்வழக்கு 21 ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.




இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “சென்னை உயர்நீதிமன்றம்: நம்பிக்கை வாக்கெடுப்பு காட்சிப்பதிவை ஸ்டாலினிடம் அளிக்க வேண்டும்”

அதிகம் படித்தது