மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

சென்னை உயர்நீதிமன்றம்: நடிகர் சங்க கட்டிடம் கட்ட இடைக்கால தடை



May 6, 2017

சென்னை அபிபுல்லா சாலையில் தென்னிந்திய நடிகர் சங்கத்திற்குச் சொந்தமான நிலத்தில் கட்டிடம் கட்டுவதற்காக சமீபத்தில் பூமி பூஜை நடைபெற்றது. அந்த இடத்தில் 33 அடி சாலை ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாக அப்பகுதி குடியிருப்புமக்கள் ஸ்ரீரங்கன் சென்னை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

Siragu artistes-association-building

இதைத் தொடர்ந்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இவ்வழக்கின் விசாரணையில் சாலையை ஆக்கிரமித்து கட்ட வேண்டிய அவசியம் என்ன என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். இந்த வழக்கில் பதில் அளிக்க வேண்டும் என்று உயர்நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இந்த வழக்கின் விசாரணை இன்று நடைபெற்றது. அதில் நடிகர் சங்கத்துக்கான கட்டிடம் கட்டுவதற்கு இடைக்கால தடை விதித்தது சென்னை உயர்நீதிமன்றம். மேலும் இவ்வழக்கு ஜூன் 2ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.




இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “சென்னை உயர்நீதிமன்றம்: நடிகர் சங்க கட்டிடம் கட்ட இடைக்கால தடை”

அதிகம் படித்தது