மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை: தென் மாவட்டங்களில் சூறை காற்று



Apr 24, 2017

தமிழகத்தில் சென்ற மார்ச் மாதத்திலிருந்தே வெளியிலின் தாக்கம் அதிகமாகக் காணப்படுகிறது. அதிலும் கடந்த இரண்டு வாரங்களாக அநேக மாவட்டங்களில் 105 டிகிரி பாரன்ஹீட்டுக்கு மேல் பதிவாகியுள்ளது.

Siragu meteorological

சென்னையைப் பொறுத்தவரை இதுவரை இல்லாத அளவு வெப்பநிலை 109 டிகிரி பதிவாகியுள்ளது. அதிகபட்சமாக திருத்தணியில் 113 டிகிரியும், வேலூரில் 110 டிகிரியும் பதிவாகியுள்ளது.

வெப்பச்சலனம் காரணமாக ஆங்காங்கே மழை பெய்தாலும், வெப்பத்தின் தாக்கம் அதிகமாகவே இருக்கும். தருமபுரி, சேலம், கிருஷ்ணகிரி, வேலூர் ஆகிய மாவட்டங்களில் அனல் காற்று வீசும் என்றும், எனவே வெளியில் செல்லும் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று எச்சரித்துள்ளார் சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன்.

மேலும் மதுரை, திண்டுக்கல், தேனி, விருதுநகர், ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் சூறை காற்று வீசும் எனவும் எச்சரித்துள்ளது சென்னை வானிலை ஆய்வு மையம்.




இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை: தென் மாவட்டங்களில் சூறை காற்று”

அதிகம் படித்தது