மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

சென்னை வானிலை ஆய்வு மையம்: தமிழகத்தில் பரவலாக மழை



Jan 28, 2017

வங்கக் கடலில் தற்போது உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை, மன்னார் வளைகுடாவில் நிலை கொண்டிருந்தது. இதையடுத்து தமிழகம் முழுவதிலும் பரவலாக மழை பெய்து வருகிறது.

Siragu rain

இந்த குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை இன்று குமரி கடல் அருகே நிலை கொண்டுள்ளது. அதன் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தின் தென் மாவட்ட பகுதிகளில் ஒரு சில இடங்களிலும், வட தமிழகம் மற்றும் புதுச்சேரியின் சில இடங்களிலும் மிதமான மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் கூறியுள்ளார்.

கடந்த 24 மணி நேரத்தில் அதிக பட்சமாக பாம்பனில் 13 செ.மீ மழையும், ராமநாதபுரத்தில் 11 செ.மீ மழையும் பெய்துள்ளது. மேலும் சென்னையைப் பொறுத்தவரை ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்யலாம் என கூறியுள்ளார்.




இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “சென்னை வானிலை ஆய்வு மையம்: தமிழகத்தில் பரவலாக மழை”

அதிகம் படித்தது