மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

சென்னை வானிலை மையம்: வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் மழை



May 22, 2017

வேறு எந்த ஆண்டும் இல்லாத கோடைகால வெப்பநிலை இந்த ஆண்டு அதிகமாகக் காணப்படுகிறது. கடந்த சில வாரங்களாகவே தமிழகத்தின் பல பகுதிகளில் வெயில் சதம் அடித்துள்ளது.

Siragu-rain

வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தபோதிலும் தமிழகத்தின் உள்மாவட்டங்களில் அவ்வப்போது கனமழை பெய்து வருகிறது. கோடைகாலத்தின் அக்னி நட்சத்திரம் துவங்கிய நாள் முதல் வெயிலின் தாக்கம் மேலும் அதிகரித்து காணப்படுகிறது.

அதிக வெப்பம் காரணமாக பகல் வேளையில் மக்கள் வெளியில் செல்வதைத் தவிர்த்து வருகிறார்கள். இந்நிலையில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வெப்பச்சலனம் காரணமாக மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

அதிகபட்ச வெப்பநிலையாக திருத்தணியில் 107 டிகிரி பதிவாகியுள்ளது. அடுத்த இரண்டு நாட்களுக்கு வெயிலின் தாக்கம் குறைவாக இருக்கும் என்றும், அடுத்த ஒரு வாரத்திற்கு பலத்த காற்றுடன் மழை பெய்யும் என்று கூறியுள்ளது. சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்று கூறியுள்ளது சென்னை வானிலை மையம்.




இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “சென்னை வானிலை மையம்: வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் மழை”

அதிகம் படித்தது