மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

செல்லாது என அறிவித்த 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்களை மாற்ற வங்கிகளில் மக்கள் குவிந்தனர்



Nov 10, 2016

நேற்று முன்தினம் இரவு முதல், 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் இனி செல்லாது என மத்திய அரசு அதிரடியாக அறிவித்தது. இதைத் தொடர்ந்து மக்கள் பழைய நோட்டுக்களை மாற்ற முடியாமல் தவித்தனர்.

siragu-money

நேற்று வங்கிகள் மற்றும் ஏ.டி.எம் மற்றும் வங்கிகள் இயங்காத நிலையில் மக்கள் அடிப்படை செலவுக்காக மிகவும் சிரமப்பட்டனர். இந்நிலையில் வங்கிகள் திறக்கப்பட்டவுடன் பழைய நோட்டுக்களை மாற்றுவதற்காக மக்கள் குவிந்தனர்.

வங்கிகளில் பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்களை மாற்றுவதற்காக விண்ணப்பப் படிவங்கள் வந்திருக்கிறது. இப்படிவங்கள் பூர்த்தி செய்யப்பட்டு எதேனும் ஒரு அடையாளச் சான்றை காண்பித்து பழைய நோட்டுக்களை மாற்றிக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று முதல் வங்கிகளிலும், நாளை முதல் ஏ.டி.எம்.லும் புதியதாக 500 மற்றும் 2000 நோட்டுக்கள் மக்களிடம் சேர்க்கப்படும் என்று அறிவித்துள்ளனர்.

மேலும் 1000 ரூபாய் நோட்டும் சில மாதங்களில் புழக்கத்திற்கு விடப்படும் என மத்திய பொருளாதார விவகாரத்துறை செயலாளர் அறிவித்துள்ளார்.




இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “செல்லாது என அறிவித்த 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்களை மாற்ற வங்கிகளில் மக்கள் குவிந்தனர்”

அதிகம் படித்தது