மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா உள்ளிட்ட 3 பேரும் குற்றவாளி என உச்சநீதிமன்றம் தீர்ப்பு: 4 ஆண்டுகள் சிறைதண்டனை



Feb 14, 2017

ஜெயலலிதா முதல்வராக இருந்தபொழுது வருமானத்திற்கு அதிகமாக 66 கோடி ரூபாய் சொத்து சேர்த்ததாக 1996-ல் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் மீது பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

Siragu-sasikala22014 செப்டம்பர் 27ல் இவ்வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டது. இதில் ஜெயலலிதா-விற்கு 4 ஆண்டு சிறையும், 100 கோடி ரூபாய் அபராதமும், மற்ற 3பேருக்கு 4 ஆண்டு சிறையும், 10 கோடி ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார் நீதிபதி குன்ஹா. இதையடுத்து நான்கு பேரும் பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த நான்கு பேரும் 21 நாட்களுக்குப் பிறகு ஜாமீனில் வெளியே வந்தனர்.

இவ்வழக்கு தொடர்பாக ஜெ., உள்ளிட்ட நான்கு பேரும் பெங்களூர் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். இந்த வழக்கின் விசாரணைக்குப் பின் 2015 மே 11ல் நான்கு பேரையும் விடுவித்து தீர்ப்பளித்தார் நீதிபதி குமாரசாமி.

இத்தீர்ப்பை எதிர்த்து கர்நாடக அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இவ்வழக்கின் விசாரணை முடிவடைந்து நீதிபதிகள் பினாகி சந்திரகோஷ், அமித்வா ராய் போன்ற இரண்டு நீதிபதிகள் இன்று தீர்ப்பளித்துள்ளனர்.

சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா, சுதாகரன், இளவரசி போன்றோர் குற்றவாளி எனவும், அவர்களுக்கு நான்கு ஆண்டு சிறை தண்டனையும், ரூ.10 கோடி அபராதமும் வித்தித்து தீர்ப்பளித்துள்ளனர். இத்தீர்ப்பினால் சசிகலா பத்தாண்டுக்கு தேர்தலில் நிற்க முடியாத நிலை உள்ளது.




இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா உள்ளிட்ட 3 பேரும் குற்றவாளி என உச்சநீதிமன்றம் தீர்ப்பு: 4 ஆண்டுகள் சிறைதண்டனை”

அதிகம் படித்தது