மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

சொலாரில் இயங்கும் ரயில்கள் தமிழகத்தில் அறிமுகம்



Jan 6, 2017

இந்தியன் ரயில்வேயின் பசுமை திட்டத்தின் தொடக்க விழா சேலத்தில் நடைபெற்றது. அதில் தென்னக ரயில்வே பொது மேலாளர் வசிஷ்ட ஜோஹ்ரி, இந்த்-ஆஸி சோலார் நிறுவனத்தின் பொது மேலாளர் பாலசுப்ரமணி, இந்நிறுவனத்தின் ஆராய்ச்சி மற்றும் திட்ட வளர்ச்சி இயக்குனர் பாலா பழனி ஆகியோர் கலந்து கொண்டனர்.

siragu-solar-train

தெற்கு ரயில்வே “கோ கிரீன் கோச்” என்ற அடிப்படையில் மேற்கூரையில் சோலார் பிளேடுகள் பொருத்தப்பட்ட ரயில் பெட்டிகளை தென்னிந்தியாவில் விரைவில் அறிமுகப்படுத்த உள்ளது. தென் தமிழகத்தின் பசுமை ரயில் கோவை-மயிலாடுதுறை வழித்தடத்தில் விரைவில் இயக்கவுள்ளது.

சோலார் மூலம் தயாரிக்கப்படும் மின்சாரம், ரயில்களில் உள்ள மின் விளக்குகள், மின் விசிறிகள் போன்றவை செயல்பட உதவும். இதனால் எரிபொருள் மிச்சப்படும், காற்று மாசடைவது குறையும் என்று நிறுவனத்தின் திட்ட மேலாளர் கூறியுள்ளார்.




இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “சொலாரில் இயங்கும் ரயில்கள் தமிழகத்தில் அறிமுகம்”

அதிகம் படித்தது