மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

ஜப்பானில் நிலநடுக்கம்: நிலநடுக்கத்தைத் தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை



Nov 22, 2016

இன்று காலை ஜப்பானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது என அந்நாட்டு வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலநடுக்கத்தின் அளவு 6.9 ரிக்டர் என அளவிடப்பட்டுள்ளது. புக்குசிமாவுக்கு அருகில் 20 கி.மீ ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதால் அங்குள்ள கட்டிடங்கள் குழுங்கின. இதில் இரண்டு பேர் காயமடைந்துள்ளனர் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

siragu-japan-quake

இந்த சக்தி வாய்ந்த நிலநடுக்கம் காரணமாக மியாகி மற்றும் புக்குசிமா பகுதிகளில் சுனாமி எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இதனால் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.

புக்குசிமாவில் அணு உலை உள்ளதால் சுனாமி ஏற்பட்டால் பாதிப்பு ஏற்படும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. எனவே அந்த அணுஉலையின் நீர் குளிர்ச்சி கட்டமைப்பின் மூன்றாவது உலை செயல்பாட்டை ஜப்பான் அரசு நிறுத்தியுள்ளது. இதற்கு முன் 2011ல் ஏற்பட்ட சுனாமியால் புக்குசிமா அணுஉலை பெரும் சேதத்துக்குள்ளானது.




இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “ஜப்பானில் நிலநடுக்கம்: நிலநடுக்கத்தைத் தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை”

அதிகம் படித்தது