மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

ஜம்மு-காஷ்மீரில் பள்ளிகளுக்கு தீ வைப்பு



Oct 31, 2016

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் நேற்று 3 பள்ளிகளுக்கு அடையாளம் தெரியாத நபர்களால் தீ வைக்கப்பட்டது. எனவே அங்கு பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது.

siragu-kashmir-fire

ஜம்மு காஷ்மீரில் கடந்த ஜூலை மாதம் 8ம் தேதி புர்ஹான் வானி என்ற பயங்கரவாதி சுட்டுக்கொள்ளப்பட்டதை அடுத்து தொடர்ந்து வன்முறை நிகழ்ந்து வருகிறது. இவ்வன்முறைக்கு 90 க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். அதனால் அங்கு பள்ளி மற்றும் கல்லூரிகள் இன்னும் முழுமையாக செயல்படவில்லை.

இந்நிலையில் பிரிவினைவாத ஆதரவாளர்கள் பள்ளிகளுக்கு தீ வைத்து வருகின்றனர். கடந்த சில நாட்களாக இருபதுக்கும் மேற்பட்ட பள்ளிக் கட்டடங்கள் எரிக்கப்பட்டுள்ளன. ஜம்மு-காஷ்மீரின் அனந்தநாக் பகுதியில் நேற்று ஒரு நாள் மட்டும் அடுத்தடுத்து மூன்று பள்ளிகளுக்கு தீ வைக்கப்பட்டது.




இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “ஜம்மு-காஷ்மீரில் பள்ளிகளுக்கு தீ வைப்பு”

அதிகம் படித்தது