மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

ஜம்மு-காஷ்மீர் எல்லைப்பகுதியில் தீவிரவாதிகள், ராணுவத்தினரிடையே துப்பாக்கிச்சூடு: 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை



Dec 9, 2016

ஜம்மு-காஷ்மீர் எல்லையை ஒட்டிய கிராமத்துப் பகுதிகளில் தீவிரவாதிகள் ஊடுருவியிருப்பதாக காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது. அதனால் எல்லை ஒட்டியுள்ள பகுதிகளில் காவல்துறையினரும், ராணுவத்தினரும் தேடுதல் பணியில் ஈடுபட்டனர்.

siragu-pakistan2

அப்பகுதியில் பதுங்கியிருந்த தீவிரவாதிகள் ராணுவத்தினர் மீது தாக்குதல் நடத்தினர். பதில் தாக்குதல் நடத்தியதில் மூன்று தீவிரவாதிகள் ராணுவத்தினரால் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

சுட்டுக்கொல்லப்பட்ட மூன்று தீவிரவாதிகளும் லஷ்கர் இ தொய்பா அமைப்பைச் சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது. இப்பகுதியில் தீவிரவாதிகள் வேறு யாரேனும் இருக்கிறார்களா என ராணுவத்தினரும் காவல்துறையினரும் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.




இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “ஜம்மு-காஷ்மீர் எல்லைப்பகுதியில் தீவிரவாதிகள், ராணுவத்தினரிடையே துப்பாக்கிச்சூடு: 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை”

அதிகம் படித்தது