மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

ஜல்லிக்கட்டு வழக்கில் மத்திய அரசு வாதம்: டிசம்பர் 7 க்கு ஒத்திவைப்பு



Dec 1, 2016

2014ம் ஆண்டு மே மாதம் ஜல்லிக்கட்டுக்கு தடை விதித்தது உச்சநீதிமன்றம். கடந்த ஜனவரி 8ம் தேதி அனுமதி வழங்கி உத்தரவிட்டது மத்திய அரசு. இதற்கு எதிராக இந்திய விலங்குகள் பாதுகாப்பு சங்கங்களின் கூட்டமைப்பு வழக்கு தொடர்ந்தது.

siragu-jallikattu

வழக்கை விசாரணை செய்த உச்சநீதிமன்றம் ஜனவரி 14ம் தேதி ஜல்லிக்கட்டுக்கு இடைக்கால தடை விதித்தது. இத்தடையை எதிர்த்து தமிழக அரசு மறுஆய்வு மனு தாக்கல் செய்தது. இவ்வழக்கின் விசாரணையில் ஜல்லிக்கட்டு விலங்குகளை துன்புறுத்தும் செயல் எனக்கூறி அனுமதி மறுத்து உத்தரவிட்டது.

ஜல்லிக்கட்டுக்கு அனுமதி அளித்த மத்திய அரசு பிறப்பித்த அறிவிக்கைக்கு தடைகோரும் மனுக்கள் மீதான விசாரணை இன்று விசாரணைக்கு வந்தது. இதில் மத்திய அரசு வாதத்தை முன் வைத்தது. தொடர்ந்து வாதத்திற்குப் பிறகு இவ்வழக்கை டிசம்பர் 7ம் தேதி ஒத்தவைக்கப்பட்டது.




இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “ஜல்லிக்கட்டு வழக்கில் மத்திய அரசு வாதம்: டிசம்பர் 7 க்கு ஒத்திவைப்பு”

அதிகம் படித்தது