மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

டிசம்பர் 10 க்குப் பிறகு பழைய 500 ரூபாய் நோட்டுகள் ரயில்கள், பேருந்துகளில் செல்லாது



Dec 8, 2016

நவம்பர் 8ம் தேதி 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என பிரதமர் மோடி அறிவித்தார். இந்த அறிவிப்பிலிருந்து கட்டுப்பாடுகள் பல விதிக்கப்பட்டு வந்தது.

siragu-rupees1

கல்விக்கட்டணம், செல்போன்களின் டாப்-அப் செய்வது, கூட்டுறவு கடைகளில் பொருட்கள் பெறுவது, அரசு நடத்தும் பால் பூத்களில், குடிநீர்- மின்சார கட்டணம், அரசு மருத்துவமனைகள், மருந்தகங்கள், ரயில்வே டிக்கெட் கவுண்டர்கள், அரசு போக்குவரத்து கழக கவுண்டர்கள், மயான இடுகாடுகள், காஸ் சிலிண்டர் வாங்கும் பொழுது, ரயிலில் உள்ள உணவகங்களில், புறநகர் மற்றும் மெட்ரோ ரயில்களில் டிக்கெட் வாங்கும் பொழுது, மத்திய- மாநில அரசு விதிக்கும் வரிகள், அபராதங்கள் கட்ட, நீதிமன்ற கட்டணம், அரசு நிறுவனங்கள் நடத்தும் விற்பனை நிலையங்களில் விதைகள் வாங்க என்று இவை அனைத்திலும் பழைய 500 ரூபாய் நோட்டுக்கள் பயன்படுத்தலாம் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால் இன்று, ரயில்கள் மற்றும் பேருந்துகளில் டிசம்பர் 10 க்குப் பிறகு பழைய 500 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அதிரடியாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

டிசம்பர் 2 முதல் பெட்ரோல் பங்குகள் மற்றும் விமான நிலையங்களில் பழைய 500 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவித்த நிலையில், இன்று அறிவித்த இந்த அறிவிப்பு மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.




இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “டிசம்பர் 10 க்குப் பிறகு பழைய 500 ரூபாய் நோட்டுகள் ரயில்கள், பேருந்துகளில் செல்லாது”

அதிகம் படித்தது