மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

டிசம்பர் 30 வரை, 5 முறைக்கு மேல் ஏ.டி.எம்-ல் பணம் எடுத்தால் பிடிக்கப்படும் சேவைக்கட்டணம் ரத்து



Nov 15, 2016

மத்திய அரசு பழைய 500, 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என அறிவித்தது. வங்கிகளில் பணம் எடுப்பதற்காக சில நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளது. செலவுக்காக மக்கள் வங்கிகள் மற்றும் ஏ.டி.எம். ளில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. இதனால் மக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

siragu-atm

ஏ.டி.எம். மையங்களில் 5 முறைக்கு மேல் பணம் எடுத்தால் சேவை கட்டணம் வசூலிக்கப்படும். தற்போது ஏற்பட்டுள்ள மக்களின் சிரமத்தைக் குறைக்க ஏ.டி.எம். மையங்களில் வசூலிக்கப்படும் சேவைக்கட்டணத்தை டிசம்பர் 30 வரை ரத்து செய்யப்பட்டுள்ளது என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் 500, 2000 ரூபாய் புதிய நோட்டுகள் மக்களின் புழக்கத்திற்கு விடப்பட்டுள்ளது, மேலும் இப்போது ஏற்பட்டிருக்கும் இந்நிலைமை மூன்று வாரத்திற்குள் சீரடையும் என மத்திய நிதியமைச்சர் தெரிவித்துள்ளார்.




இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “டிசம்பர் 30 வரை, 5 முறைக்கு மேல் ஏ.டி.எம்-ல் பணம் எடுத்தால் பிடிக்கப்படும் சேவைக்கட்டணம் ரத்து”

அதிகம் படித்தது