மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

டிடிவி தினகரனிடம் தீவிர விசாரணை நடத்துகிறது டெல்லி போலிஸ்



Apr 26, 2017

இரட்டை இலை சின்னத்தை பெறுவதற்காக லஞ்சம் வழங்கியதாக குற்றம் சாட்டப்பட்ட டிடிவி தினகரன் நான்கு நாட்கள் விசாரணைக்குப் பின் நேற்று இரவு டெல்லியில் கைதானார்.

Siragu dinakaran1

டிடிவி தினகரனை போலிஸ் காவலில் வைத்து விசாரணை செய்ய ஏழு நாட்கள் கேட்ட நிலையில், ஐந்து நாட்கள் மட்டுமே வழங்கி உத்தரவிட்டது டெல்லி தீஸ் ஹசாரி நீதிமன்றம்.

சென்னை, பெங்களூர், கொச்சி போன்ற இடங்களுக்கு டிடிவி தினகரனை அழைத்துச் சென்று விசாரணை நடத்தப்பட உள்ளதாக டெல்லி போலிஸ் திட்டமிட்டுள்ளது. முதற்கட்டமாக நாளை டிடிவி தினகரனை சென்னை அழைத்து வந்து விசாரணை நடத்தப்படவுள்ளது. சென்னையை அடுத்து பெங்களூர் மற்றும் கொச்சி ஆகிய இடங்களுக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளது டெல்லி போலிஸ்.




இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “டிடிவி தினகரனிடம் தீவிர விசாரணை நடத்துகிறது டெல்லி போலிஸ்”

அதிகம் படித்தது