மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

டெல்லியில் விவசாயிகள் போராட்டம்: ஆதரவாக கடலூரில் போராட்டம்



Mar 31, 2017

தமிழகத்தில் ஏற்பட்டுள்ள வறட்சி காரணமாக விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக விவசாயிகளின் மரணம் 250ஐ தாண்டியது. பயிர்க்கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும், மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் 18 நாட்களாக தமிழக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

Siragu-farmers

எலிக்கறி தின்னும் போராட்டம், வாயில் கறுப்புத்துணி கட்டி போராட்டம் என்று பல்வேறு வடிவங்களில் நடைபெறும் இப்போராட்டத்தில் இன்று(31.03.17) கழுத்தில் ருத்ராட்சை மாலை அணிந்து விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

பெண்கள் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்ட இப்போராட்டம் பிரதமர் மோடியின் கவனத்தை ஈர்ப்பதற்காகவே ருத்ராட்சை மாலை அணிந்து போராட்டம் நடத்துவதாக தெரிவித்தனர்.

டெல்லியில் போராட்டம் நடத்தும் விவசாயிகளுக்கு ஆதரவாக சென்னை, திருச்சி, தஞ்சை சேலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மாணவர்கள், இளைஞர்கள், விவசாயிகள் என பலரும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இவ்வகையில் இன்று(31.03.17) கடலூரில் உள்ள சில்வர் பீச் பகுதியில் விவசாயிகளுக்கு ஆதரவாக போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்பகுதியில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 15 பேரைக் கைது செய்துள்ளது காவல்துறை.




இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “டெல்லியில் விவசாயிகள் போராட்டம்: ஆதரவாக கடலூரில் போராட்டம்”

அதிகம் படித்தது