மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

டெல்லியில் 22 நாட்களாக போராடும் தமிழக விவசாயிகள்



Apr 4, 2017

தமிழகத்தில் ஏற்பட்டுள்ள வறட்சி காரணமாக விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். பயிர்க்கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் பெண்கள் உட்பட நூற்றுக்கும் மேற்பட்ட தமிழக விவசாயிகள் 22 நாட்களாக போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

Siragu-tamil-farmers2

வாயில் கருப்பு துணி கட்டி போராட்டம், பாம்புக்கறி தின்னும் போராட்டம், எலிக்கறி தின்னும் போராட்டம் போன்ற பல வடிவங்களில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

அவ்வகையில் இன்று அரை மொட்டை, அரை மீசை, அரை தாடியுடன் தமிழக விவசாயிகள் நூதன முறையில் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இந்நிலையில் கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகளின் கடனை தள்ளுபடி அளிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த உத்தரவினால் மகிழ்ச்சியடைந்த போராடும் தமிழக விவசாயிகள், தேசிய வங்கியில் உள்ள ஏழாயிரம் கோடி பயிர்கடன்களை தள்ளுபடி செய்யும் வரை டெல்லியிலிருந்து செல்ல மாட்டோம் என்று போராட்டம் நடத்தி வருகிறார்கள்.




இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “டெல்லியில் 22 நாட்களாக போராடும் தமிழக விவசாயிகள்”

அதிகம் படித்தது