மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

தஞ்சையில் விவசாயிகள் போராட்டம்



Mar 28, 2017

பயிர்க்கடன் தள்ளுபடி, காவிரி மேலாண்மை வாரியம் அமைத்தல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லி ஜந்தர் மாந்தர் பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட தமிழக விவசாயிகள் 15 நாட்களாக போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

Siragu farmers1

மேலும் நேற்று(27.03.17)தமிழ்நாடு உட்பட நாடு முழுவதிலும் 31 இடத்தில் ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கான ஒப்பந்தத்தில் மத்திய அரசு கையெழுத்திட்டது. இதனால் அதிர்ச்சியடைந்த நெடுவாசல், நலாண்டார்கொல்லை, கோட்டைக்காடு, வடகாடு போன்ற கிராமக் மக்கள் போராட்டத்தை நடத்துவது தொடர்பாக ஆலோசனை நடத்தி வருகிறார்கள்.

இந்நிலையில் டெல்லியில் போராட்டம் நடத்தும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையிலும், ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையிலும் தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு, காவிரி உரிமை மீட்புகுழுவினரும், தஞ்சை விவசாயிகளும் போராட்டத்தில் குதித்துள்ளனர்.

தகவல் அறிந்த திருவாரூர், நாகை மாவட்ட விவசாயிகளும் இப்போராட்டத்திற்கு வலுசேர்க்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.




இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “தஞ்சையில் விவசாயிகள் போராட்டம்”

அதிகம் படித்தது