மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

தஞ்சை விவசாயிகள் தொடர்போராட்டம்



Apr 4, 2017

விளை நிலங்களில் எண்ணெய் மற்றும் எரிவாயு எடுக்கக்கூடாது, விவசாயிகளின் அனைத்து கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும், காவிரி தீர்ப்பாயத்தை ரத்து செய்வதை கைவிட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி காவிரி உரிமை மீட்புக் குழுவினர் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

Siragu farmers1

காவிரி உரிமை மீட்புக் குழுவின் சார்பில் பெ.மணியரசன், விவசாயிகள் சங்கம், விவசாய குடும்பத்தை சேர்ந்தவர்கள், பெண்கள் என பலரும் தொடர்போராட்டம் நடத்தி வருகிறார்கள். இன்று தஞ்சை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையோரம் பந்தல் அமைத்து தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

8வது நாளாக நடைபெறும் இப்போராட்டம் விவசாயிகள் படும் வேதனையை தெரிவிக்கும் வகையில் பல வடிவங்களில் நடத்தி வருகிறார்கள். அவ்வகையில் வாயில் கூழாங்கற்களை வைத்தும், உடல் முழுவதும் சேற்றைப் பூசியபடியும் போராட்டம் நடத்தி வருகிறார்கள். மேலும் டெல்லியில் போராட்டம் நடத்தும் தமிழக விவசாயிகளுக்கு தங்களது ஆதரவை தெரிவித்துள்ளனர்.




இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “தஞ்சை விவசாயிகள் தொடர்போராட்டம்”

அதிகம் படித்தது