மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

தனியன் (கவிதை)

குமரகுரு அன்பு

Dec 3, 2022
siragu victory1
விடுபட்ட சொல்லாய்
விழுந்து கிடப்பவனைத் தாண்டி எழுதப்பட்டன
மிக நீளமான சொற்றொடர்கள்!!
காவல் தெய்வத்தின்
காலடியில் நசுங்கிக் கிடக்கும் தலையாக ஒருவன்
யாராலாவது
நசுக்கப்பட்டு கொண்டே இருக்கிறான்!!!
யாரிடமும் பகிர முடியாத
துக்கத்தின் சொற்களை
வானத்தில்
தூக்கி எறிந்து
தூக்கி எறிந்து
விளையாடுகிறான்!!
அவன் கண்ணீரில்
ஒட்டிக் கொண்டு
ஒழுகிவிடுகின்றன சில,
கீழே விழுந்த பின்
ஊர்ந்து
அவன் மீது ஏறிக் கொள்கின்றன சில.

குமரகுரு அன்பு

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “தனியன் (கவிதை)”

அதிகம் படித்தது