மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

தமிழகத்தின் பல மாவட்டங்களில் சதமடித்த வெப்பநிலை



Apr 4, 2017

சென்ற மார்ச் முதல் கோடை வெயில் துவங்கியுள்ளது. டெல்டா மாவட்டங்கள், வடக்கு மாவட்டங்களில் வெப்பம் அதிகமாக உள்ளது. தமிழகத்தில் பல மாவட்டங்களில் வெப்பநிலை சதமடித்துள்ளது.

Siragu temperature

கோவை, திருப்பூர் மாவட்டங்களில் 100 டிகிரி வெப்பநிலையை தொட்டுள்ளது. கரூர் பரமத்தியில் 104 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது. அடுத்த இரண்டு மாதங்களுக்கு வெப்பநிலை அதிகமாகக் காணப்படும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தென் மாவட்டங்களில் வெயில் உச்சத்தை அடைந்துள்ளது. மதுரை, சேலம், நெல்லை, திருச்சி, வேலூர் போன்ற இடங்களில் 102 டிகிரி வெப்பநிலை பதிவாகியுள்ளது. சென்னை மீனம்பாக்கம் விமான நிலையம் பகுதியில் 98 டிகிரி பாரன்ஹீட் வெப்பநிலை பதிவாகியுள்ளது.




இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “தமிழகத்தின் பல மாவட்டங்களில் சதமடித்த வெப்பநிலை”

அதிகம் படித்தது