மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

தமிழகத்தின் 18 மாவட்டங்களில் வெப்பக்காற்று வீசும்



Apr 18, 2017

தமிழகத்தின் 18 மாவட்டங்களில் இன்று(18.04.17)அனல் காற்று வீசும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. எனவே இன்று(18.04.17) பகல் 12 மணியிலிருந்து 3 மணி வரை வழக்கத்தை விட அதிகமாக வெப்பக்காற்று வீசும் என்பதால் மக்கள் வெளியே வர வேண்டாம் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Siragu summer

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர், கடலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, தர்மபுரி, நாமக்கல், சேலம், கரூர், ஈரோடு, திருச்சி, பெரம்பலூர், கிருஷ்ணகிரி, அரியலூர் போன்ற 18 மாவட்டங்களில் வெப்பக்காற்று அதிகம் வீசும்.

எனவே இம்மாவட்டங்களில் அனல் காற்று அதிகம் வீசும் என்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளுமாறு தமிழக பேரிடர் மேலாண்மை இயக்குனர் லதா, மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.




இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “தமிழகத்தின் 18 மாவட்டங்களில் வெப்பக்காற்று வீசும்”

அதிகம் படித்தது