மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

தமிழகத்தில் குடிநீர் பஞ்சம்: காலி குடங்களுடன் பெண்கள் போராட்டம்



May 5, 2017

கடந்த ஆண்டு பருவமழை பொய்த்ததால் தமிழகத்தில் கடுமையான வறட்சி நிலவுகிறது. இதன் காரணமாக விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டதுடன், குடிநீர் பஞ்சமும் ஏற்பட்டுள்ளது.

Siragu water problem

குடிநீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளதால் பொதுமக்கள் காலி குடங்களுடன் போராடும் நிலை ஏற்பட்டுள்ளது. விழுப்புரம் மாவட்டம் கூத்தக்குடி கிராமத்தில் குடிநீர் விநியோகம் செய்யாததால் அங்குள்ள பெண்கள் காலிக்குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போராட்டம் நடைபெற்றதால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. அதிகாரிகளின் பேச்சுவார்த்தைக்குப் பிறகு கலைந்து சென்றனர் பொதுமக்கள்.

இதனையடுத்து திருவாரூர் மாவட்டம் பெரம்பூர் பகுதி மற்றும் சென்னையை அடுத்த திருவள்ளூர் மாவட்டத்தின் பல பகுதிகளிலும் குடிநீர் தட்டுப்பாட்டால் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.




இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “தமிழகத்தில் குடிநீர் பஞ்சம்: காலி குடங்களுடன் பெண்கள் போராட்டம்”

அதிகம் படித்தது