மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

தமிழகத்தில் மீத்தேன் திட்டம் ரத்து



Nov 10, 2016

தஞ்சை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களின் பூமிக்கு அடியில் மீத்தேன் இருப்பதாகக் கூறி எரிவாயு எடுக்க மத்திய அரசு முடிவு செய்திருந்தது. இதற்கு மக்களும், அரசியல் தலைவர்கள் பலரும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

siragu-methen

இந்நிலையில் டெல்லியில் பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் நிருபர்களிடம் பேட்டி அளித்தார். அப்போது தமிழகத்தின் டெல்டா மாவட்டகளில் மீத்தேன் எடுக்கும் திட்டத்தை மத்திய அரசு ரத்து செய்துள்ளது. நில கையகப்படுத்துதலில் ஏற்பட்ட குழப்பம் மற்றும் டெல்டா மாவட்ட விவசாயிகள் எதிர்ப்பு காரணமாகவும் இத்திட்டத்தை கைவிடுகிறோம் என்றார்.

மேலும் கரும்பிலிருந்து எத்தனால் எரிவாயு எடுக்கும் திட்டத்துக்கும், கெயில் எரிவாயு பதிக்கும் திட்டத்துக்கும் தமிழக அரசு அனுமதி தரவேண்டும் என்றும் தெரிவித்தார். மத்திய அரசின் இம்முடிவிற்கு டெல்டா மாவட்ட விவசாயிகள் சங்கத்தினர் பாராட்டுக்களையும், வரவேற்பையும் தெரிவித்தனர்.




இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “தமிழகத்தில் மீத்தேன் திட்டம் ரத்து”

அதிகம் படித்தது