மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

தமிழகம் உட்பட ஆறு மாநிலங்களில் லாரி காலவரையற்ற வேலைநிறுத்தம்



Mar 30, 2017

தமிழகம், ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானா, புதுச்சேரி, கேரளா போன்ற ஆறு மாநிலங்களில் இன்று(30.03.17) முதல் 18 லட்சம் லாரிகள் ஓடாது என்று லாரி உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Siragu lorry-strike

பெட்ரோல், டீசல் மீதான வாட் வரியை திரும்பப் பெற வேண்டும், ஆர்டிஓ அலுவலகங்களில் கட்டண உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, இக்கோரிக்கைகளை நிறைவேற்றும் வரை போராட்டம் நடைபெறும் என்று லாரி உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தில் லாரி உரிமையாளர்கள் நடத்தும் இப்போராட்டத்திற்கு சரக்கு புக்கிங் ஏஜெண்டுகள், எரிவாயு டாங்கர் லாரி உரிமையாளர்கள், மணல் லாரி உரிமையாளர்கள் என பல்வேறு அமைப்புகளும் இப்போராரட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

சரக்கு புக்கிங் நிறுத்தப்பட்டதால் பத்தாயிரம் கோடி மதிப்பிலான சரக்குகள் தேக்கமடைந்துள்ளன. இன்று(30.03.17) அமைச்சர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்போவதாக லாரி உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இப்போராட்டத்திற்கு ஆதரவாக குடிநீர் டேங்கர் லாரிகள் இன்று(30.03.17) ஒரு நாள் மட்டும் இயங்காது என்று அறிவித்துள்ளது.




இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “தமிழகம் உட்பட ஆறு மாநிலங்களில் லாரி காலவரையற்ற வேலைநிறுத்தம்”

அதிகம் படித்தது