மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

தமிழக அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் 20%



Sep 28, 2016

அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸாக 20% என்று அறிவித்துள்ளார் தமிழக முதல்வர் ஜெயலலிதா.

siragu-jeyalalitha1

தமிழக அனைத்து சி மற்றும் டி பிரிவு ஊழியர்களுக்கும் போனஸாக 8.33% மற்றும் கருணைத் தொகையாக 11.67% சேர்த்து 20% போனஸாக அளிக்கப்படுகிறது.

குறைந்தபட்சம் ரூ. 8,400 லிருந்து அதிகபட்ச போனஸாக 16,800 அரசு ஊழியர்கள் பெறுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக 476 கோடியே 71 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 3,67,887 ஊழியர்கள் பயனடைய உள்ளனர்.

மேலும் குடிநீர் வடிகால் வாரியத்தைச் சேர்ந்த சி மற்றும் டி பிரிவு ஊழியர்கள் 8.33 சதவீதமும், வீட்டு வசதித்துறை, கழிவுநீர் அகற்றல், சென்னை குடிநீர் வழங்கல் துறை சார்ந்தவர்களுக்கு 10 சதவீதமும், மின்துறை, போக்குவரத்துத்துறை, நுகர்பொருள் வாணிப கழக ஊழியர்களுக்கு 20 சதவீதமும் போனஸாக வழங்கப்படவுள்ளதாக முதலமைச்சர் அறிவித்துள்ளார்.




இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “தமிழக அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் 20%”

அதிகம் படித்தது