மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

தமிழக அரசு ஊழியர்கள் நாளை(25.04.17) முதல் வேலை நிறுத்தப் போராட்டம்



Apr 24, 2017

தமிழகத்தின் 64 துறையைச் சேர்ந்த ஐந்து லட்சம் ஊழியர்கள், மத்திய அரசு ஊழியர்களுக்கு நிகரான ஊதிய உயர்வு மற்றும் ஓய்வூதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாக அறிவித்துள்ளனர்.

Siragu -Bandh2

கடந்த ஆண்டு அரசு ஊழியர்கள் ஓய்வூதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்தம் நடைபெற்றது. அப்போது சட்டசபையில் 11 அறிவிப்புகளை முதல்வராக இருந்த ஜெயலலிதா வெளியிட்டார். ஆனால் அது தொடர்பாக எந்த நடவடிக்கையும் நிறைவேற்றவில்லை.

கோரிக்கைகளை நிறைவேற்றாவிடில் நாளை முதல் தமிழக அரசு ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அரசு பணிகள் ஸ்தம்பிக்கும் அபாயம் உள்ளது.




இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “தமிழக அரசு ஊழியர்கள் நாளை(25.04.17) முதல் வேலை நிறுத்தப் போராட்டம்”

அதிகம் படித்தது