மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

தமிழக அரசு: ஒரு கிலோ பச்சரிசி, சர்க்கரை உள்ளிட்ட பொருட்கள் பொங்கல் பரிசாக வழங்கப்படும்



Jan 3, 2017

கடந்த திமுக ஆட்சியின்போது குடும்ப அட்டை உள்ள அனைவருக்கும் பொங்கல் பை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி பச்சரிசி, வெல்லம், பாசிப்பயிறு, முந்திரி, திராட்சை, ஏலக்காய் அடங்கிய இலவச பொங்கல் பை வழங்கப்பட்டது.

siragu-panneerselvam

இதன் பிறகு அதிமுக 2011ம் ஆண்டு ஆட்சிக்கு வந்த பிறகு இந்தத் திட்டம் கைவிடப்பட்டது. பின் 2013ம் ஆண்டு அதிமுக ஆட்சியில் பொங்கல் பரிசு திட்டம் என்ற பெயரில் ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு துண்டு கரும்பு மற்றும் ரூ.100 ரொக்கம் போன்றவை வழங்கப்பட்டு வந்தது.

இதையடுத்து இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையை ஒட்டி முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பொங்கல் பரிசை அறிவித்துள்ளார். அதன்படி ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு துண்டு கரும்பு மற்றும் ரூ.100 ரொக்கம் போன்றவை வழங்கப்படும்.




இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “தமிழக அரசு: ஒரு கிலோ பச்சரிசி, சர்க்கரை உள்ளிட்ட பொருட்கள் பொங்கல் பரிசாக வழங்கப்படும்”

அதிகம் படித்தது