மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

தமிழக அரசு: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 11,270 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும்



Dec 28, 2016

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 11, 12,13 ஆகிய தேதிகளில் தமிழகம் முழுவதிற்கும் சென்னையிலிருந்து 11,270 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. சிறப்புப் பேருந்துகளில் முன்பதிவுக்காக கோயம்பேடு பேருந்து நிலையத்தில் 29 முன்பதிவு கவுண்டர்கள் அமைக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இத்தேதிகளில் பயணிகள் பேருந்து ஏறும் இடமும் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

siragu-special-busses-for-pongal

திருச்சி, மதுரை, நாகர்கோவில், நெல்லை, விழுப்புரம், திருவண்ணாமலை, பண்ருட்டி, நெய்வேலி, கள்ளக்குறிச்சி செல்லும் பேருந்துகள் கோயம்பேட்டிலிருந்து புறப்படும். வேலூர், தருமபுரி, கிருஷ்ணகிரி, ஓசூர் செல்லும் பேருந்துகள் பூந்தமல்லியிலிருந்து புறப்படும்.

ஆந்திரா வழியாக செல்லும் பேருந்துகள் அண்ணாநகர் மேற்கு பேருந்து நிலையத்திலிருந்து புறப்படும். கடலூர், சிதம்பரம் செல்லும் பேருந்துகள் அடையாறு காந்திநகரிலிருந்து புறப்படும். தஞ்சாவூர், கும்பகோணம் செல்லும் பேருந்துகள் தாம்பரம் சானடோரியத்திலிருந்து புறப்படும்.

மேலும் பொங்கல் பண்டிகை முடிந்த பின்பு திரும்பும் மக்களுக்காக இதே அளவிலான சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் எனவும் அறிவித்துள்ளது.




இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “தமிழக அரசு: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 11,270 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும்”

அதிகம் படித்தது