மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

தமிழக அரசு: ரேஷன்கார்டுகளில் மேலும் ஒரு வருடத்திற்கு உள்தாள் ஒட்டப்படும்



Dec 28, 2016

உணவு வழங்கல் துறையின் மூலம் தமிழகத்தில் உள்ள அனைத்து குடும்பங்களுக்கும் குடும்ப வருவாய்க்குத் தகுந்தவாறு புதிய ரேஷன்கார்டுகள் 2005ம் ஆண்டு வழங்கப்பட்டது. இதன் காலம் 2009 டிசம்பர் மாதத்துடன் முடிவடைந்தது.

siragu-ration-cards

பின் பயோ மெட்ரிக் ரேஷன் கார்டு வழங்குவது காரணமாக 2010ல் இணைப்புத்தாள் ஒட்டப்பட்டது. தொடர்ந்து பயோ மெட்ரிக் ரேஷன் கார்டு தயாரிப்பு நடைபெறுவதால் தொடர்ந்து இணைப்புத்தாள் ஒட்டப்பட்டது. இணைப்புத்தாள் 2014டிசம்பர் மாதத்துடன் முடிவடைந்த நிலையில் இன்னும் ரேஷன் கார்டு வழங்கப்படாமல் இழுத்தடிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் ரேஷன்கார்டுகளின் செல்லத்தக்க காலத்தை அடுத்த ஆண்டு டிசம்பர் 31 வரை நீடித்து உள்தாள் ஒட்டுவதற்கு அனுமதி அளித்துள்ளது தமிழக அரசு என்று தமிழக கூட்டுறவு உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் முதன்மை செயலர் பிரதீப் யாதவ் கூறியுள்ளார்.

2017க்கான உள்தாள் சம்பந்தப்பட்ட ரேஷன் கடைகளில் வழங்கப்படும் என்றும், பெற்றுக்கொண்டதற்கான முத்திரையுடன் ரேஷன்கார்டுதாரர்களின் கையொப்பம் மற்றும் இடது பெருவிரல் ரேகை பெறப்படும் என்று அவர் கூறினார்.




இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “தமிழக அரசு: ரேஷன்கார்டுகளில் மேலும் ஒரு வருடத்திற்கு உள்தாள் ஒட்டப்படும்”

அதிகம் படித்தது