மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

தமிழக அரசு: வறட்சியால் விவசாயிகள் மரணம் இல்லை



Apr 28, 2017

மரணமடைந்த 82 விவசாயிகள் வறட்சியால் மரணமில்லை என்றும், உடல்நலக்குறைவு மற்றும் வயது மூப்பினாலேதான் உயிரிழந்தனர் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இதற்கு விவசாயிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

Siragu farmer

38 ஆயிரம் கோடிக்கு மேல் நிவாரணம் வேண்டும் என்று மத்திய அரசுக்கு, தமிழக அரசு அறிக்கை அனுப்பிய நிலையில் உச்சநீதிமன்றத்தில் வறட்சியால் ஒருவரும் மரணமடையவில்லை என்று பிரமாணப் பத்திரத்தை தாக்கல் செய்துள்ளது தமிழக அரசு. இதற்கு விவசாயிகள் மற்றும் விவசாய சங்கங்கள் கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளது.

இந்த அரசு விவசாயிகளை காப்பாற்றாது, விவசாயிகள் மீது அக்கறை இல்லை என்று விவசாயிகள் கடும் அதிருப்தியில் உள்ளனர். மேலும் விவசாயிகளின் தற்கொலையை தடுக்க தமிழக அரசு தவறிவிட்டது என்று அய்யாக்கண்ணு கூறியுள்ளார்.




இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “தமிழக அரசு: வறட்சியால் விவசாயிகள் மரணம் இல்லை”

அதிகம் படித்தது