மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

தமிழக தலைமைச் செயலராக கிரிஜா வைத்தியநாதன் பொறுப்பேற்றார்



Dec 23, 2016

தமிழக தலைமைச் செயலராக இருந்த ராம மோகன் ராவின் வீடு, அலுவலகம் என்று 12 இடங்களில் மத்திய வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். சோதனையில் பணம், தங்கம் மற்றும் ஆவணங்கள் என சிக்கியுள்ளது. அவை பற்றிய விவரங்கள் இன்னும் வெளிவரவில்லை.

siragu-girija-vaidyanathan2

வருமான வரி சோதனையில் சிக்கிய ராம மோகன் ராவ் தனது தலைமைச் செயலாளர் பதவியிலிருந்து நீக்கப்பட்டார். இதையடுத்து கிரிஜா வைத்தியநாதன் புதிய தமிழக தலைமைச் செயலராக இன்று(23.12.2016) காலை பொறுப்பேற்றுக்கொண்டார். இவர் தமிழகத்தின் 45- ஆவது தலைமைச் செயலாளர் ஆவார். இப்பதவியுடன் ஊழல் கண்காணிப்பு மற்றும் நிர்வாக சீர்திருத்தம் ஆணையர் பதவியையும் கூடுதலாக கவனிப்பார்.




இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “தமிழக தலைமைச் செயலராக கிரிஜா வைத்தியநாதன் பொறுப்பேற்றார்”

அதிகம் படித்தது