மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

தமிழக பட்ஜெட்: மாற்றுத்திறனாளிகள் நலத்துறைக்கு நிதி ஒதுக்கீடு



Mar 16, 2017

தமிழக சட்டசபையில் அறிவிக்கப்பட்ட பட்ஜெட்டில் மாற்றுத் திறனாளிகளுக்கு பல திட்டங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் ஜெயக்குமார் அறிவித்துள்ளார். அதன்படி மாற்றுத்திறனாளிகள் நலத்துறைக்கு 2017-18 நிதியாண்டில் 466 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

Siragu -tamilnadu budget

வரும் நிதியாண்டில் மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.119 கோடி செலவில் 2000 ஸ்கூட்டர்கள் வழங்கப்படும். செவித்திறன் குறைபாடு உள்ள அரசு ஊழியர்களுக்கு பயணப்படி ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்று இந்த பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

பக்கவாதம், தசைச்சிதைவு போன்றவற்றால் பாதிக்கப்பட்ட நூறு பேருக்கு மோட்டார் பொருந்திய வாகனம் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது. மாற்றுத்திறனாளிக்கு திறன் மேம்பாட்டிற்கு பயிற்சி அளிக்கப்படும் என்று இந்த பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.




இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “தமிழக பட்ஜெட்: மாற்றுத்திறனாளிகள் நலத்துறைக்கு நிதி ஒதுக்கீடு”

அதிகம் படித்தது