மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

தமிழக பட்ஜெட் 2017-18-ஐ தாக்கல் செய்தார் நிதியமைச்சர் ஜெயக்குமார்



Mar 16, 2017

2017-18ம் ஆண்டுக்கான நிதி நிலை அறிக்கையை தமிழக சட்டசபையில் இன்று தாக்கல் செய்தார் நிதியமைச்சர் ஜெயக்குமார். தமிழக அரசின் கடன் 3,14,366 கோடி உள்ளது என்றும், 2017-18 க்கான நிதி பற்றாக்குறை ரூ. 41,977 கோடி உள்ளது என்றும், ரூ. 41,965 கோடி கடன் வாங்க திட்டமிட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

Siragu assembly1

தமிழக பொருளாதார வளர்ச்சி 7% ஆக கணிக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.

  • அத்திக்கடவு-அவினாசி திட்டத்திற்கு 250 கோடி ருபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
  • விவசாயிகளுக்கு ரூ. 7000 கோடி பயிர்க்கடனை கூட்டுறவு வங்கிகள் மூலம் வழங்கப்பட உள்ளது.
  • வருவாய் துறைக்கு 5695 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
  • நீதி நிர்வாகத்துறைக்கு 984 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
  • சிறுகுறு நடுத்தர தொழில் துறைக்கு 532 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
  • ஊரக வறுமை ஒழிப்பிற்கென்று495 கொடியும், நகர்புற வறுமை ஒழிப்பிற்கென்று 272 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது.
  • நடப்பு நிதியாண்டில் தமிழ் வளர்ச்சிக்கு 48 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
  • காவல் துறைக்கென்று ரூ. 1483 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
  • பள்ளிக்கல்விக்கு 26932 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்க 758 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
  • சத்துணவுத் திட்டம், குழந்தைகள், பெண்கள் நலம் உள்ளிட்ட சமூக நலத் துறைக்கு 4781 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
  • கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் 200 ஆவின் பாலகங்கள் அமைக்கப்படும்.
  • மீன்வளத்துறை மேம்படுத்த 768 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது, மேலும் உணவு மானியத்திற்கு 5500 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
  • 2000 கோடி ரூபாய் செலவில் இருபதாயிரம் வீடுகள் குடிசை மாற்று வாரியத்தால் கட்டித்தரப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
  • சென்னை புறவழிச் சாலை அமைத்தல் மற்றும் மேம்பாட்டிற்காக 744 கோடி ஒதுக்கீடு.
  • உலக முதலீட்டாளர் மாநாடு நடத்த 75 கோடி ஒதுக்கீடு.
  • தமிழக அரசின் 100 யூனிட் இலவச மின்சார திட்டம் தொடரும், மின்சார செலவீனங்களுக்கு 8538 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
  • தாமிரபரணி-நம்பியாறு இணைப்பிற்கு 100 கோடி ஒதுக்கீடு.
  • கோவில்களில் அன்னதானம் திட்டம் தொடரும், ஏழை பெண்களுக்கு ஆடு, மாடு வழங்கும் திட்டம் போன்றவை பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ளது.



இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “தமிழக பட்ஜெட் 2017-18-ஐ தாக்கல் செய்தார் நிதியமைச்சர் ஜெயக்குமார்”

அதிகம் படித்தது