மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

தமிழக முதல்வர்: சிறுமி ஹாசினியின் குடும்பத்திற்கு 3 லட்சம் நிவாரண நிதி



Feb 13, 2017

இன்று தலைமைச்செயலகம் சென்ற தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அதிகாரிகளுடன் அரசு நிவாகம் மற்றும் சட்டம் ஒழுங்கு குறித்து ஆலோசனை நடத்தினார்.

Siragu o.p.s2

சென்ற வாரம் போரூர் அருகே மாதா நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த பாபு- ஸ்ரீதேவி தம்பதியரின் மகள் ஹாசினி கடத்தப்பட்டு எரித்து கொலை செய்யப்பட்டார்.

அதிகாரிகளுடன் ஆலோசனைக்குப் பின் முதல்வர், ஹாசினிக்கு நடந்த கொடுமை குறித்து விசாரித்து அறிந்தார். இதையடுத்து சிறுமி ஹாசினியின் குடும்பத்திற்கு மூன்று லட்சம் நிவாரண நிதி வழங்கும் ஆவணத்தில் கையெழுத்திட்டார்.

இதையடுத்து சிறுமி ஹாசினி குடும்பத்திற்கு இரங்கலை தெரிவித்துக்கொண்ட முதல்வர், குற்றவாளிக்கு தகுந்த தண்டனை கிடைக்க நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளார்.




இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “தமிழக முதல்வர்: சிறுமி ஹாசினியின் குடும்பத்திற்கு 3 லட்சம் நிவாரண நிதி”

அதிகம் படித்தது