மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

தமிழர் புத்தாண்டில் மகிழ்ச்சி பெருகட்டும் !! (கவிதை)

வழக்கறிஞர். ம. வீ. கனிமொழி

Jan 16, 2021

தமிழர் புத்தாண்டில்  மகிழ்ச்சி  பெருகட்டும் !!

siragu pongal7

காலைக் கதிரோன் சிரித்திட
வருகிறது கன்னல் பொங்கல்
தைத் திருநாள் மகிழ் பொங்கல்
துள்ளி வரும் தமிழர்
புத்தாண்டில்  மகிழ்ச்சி  பெருகட்டும்

தூது விடும் எழிலியும்
தாளத்தோடு புள்ளும் பறந்து
தகைமை கொடுக்கிறது புத்தொளி
நாளில் துவளா தமிழர்
புத்தாண்டில்  மகிழ்ச்சி  பெருகட்டும்

ஆடுகள காளைகளும் ஆடிவரும்
ஆநிரைகளை தாங்கி வருகிறது
ஆயிரம் விண்மீனும் தரையிறங்கி
ஆட்டமிட களிக்கும்; தமிழர்
புத்தாண்டில்  மகிழ்ச்சி  பெருகட்டும்

மீட்டெடுக்கும் உரிமை போரில்
மாற்றாரை துரத்தும் வேளையில்
மறத்தின் திண்மையுடன் தேர்ந்தெடுப்போம்
பைந்தமிழ் அரசினை; தமிழர்
புத்தாண்டில்  மகிழ்ச்சி  பெருகட்டும் !!


வழக்கறிஞர். ம. வீ. கனிமொழி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “தமிழர் புத்தாண்டில் மகிழ்ச்சி பெருகட்டும் !! (கவிதை)”

அதிகம் படித்தது