மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

தமிழ் உள்பட 8 மொழிகளில் நீட் தேர்வை எழுதலாம்



Dec 22, 2016

உச்சநீதிமன்றம் மருத்துவப் படிப்புக்கு தேசிய அளவில் ஒரே நுழைவுத் தேர்வை நடத்த உத்தரவிட்டிருந்தது. தமிழகம் உள்ளிட்ட சில மாநிலங்களில் கடுமையான எதிர்ப்பு வந்ததால் அத்திட்டத்தை அமல்படுத்த முடியாத நிலை மத்திய அரசுக்கு ஏற்பட்டது. இதன் பிறகு மத்திய அரசு உச்சநீதிமன்றத்தின் உத்தரவிற்கு ஓராண்டு விலக்கு அளிக்கும் வகையில் அவசரச் சட்டம் ஒன்றைக் கொண்டுவந்துள்ளது.

siragu-neet-exam

அச்சட்டத்தின்படி இந்தியா முழுவதும் 2017-18 லிருந்து நீட் நுழைவுத் தேர்வினை கட்டாயமாக்கி மத்திய அரசு அறிக்கை ஒன்றை வெளியிட்டது. தமிழ், ஆங்கிலம், வங்காளம், குஜராத்தி, தெலுங்கு, ஹிந்தி, அஸ்ஸாமி, மராத்தி போன்ற எட்டு மொழிகளில் நீட் தேர்வை எழுதலாம் என மத்திய அரசு அறிவித்துள்ளது.




இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “தமிழ் உள்பட 8 மொழிகளில் நீட் தேர்வை எழுதலாம்”

அதிகம் படித்தது