மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

தமிழ் கலைச் சொற்களை மீட்டெடுத்தல் வேண்டும்! (கவிதை)

இல. பிரகாசம்

Jun 2, 2018

tamil-mozhi-fi

(பல்லாண்டாய் தமிழ்ச் சமூகத்தில் வழங்கப்பட்டு வந்த சொற்கள் பிறமொழிக்கலப்பால் வழக்கிலிருந்து மறைந்து போயுள்ளன என்பது வருந்துதற்குரிய வேண்டியது. எனவே காரணங் கருதியும் பிற சூழ்நிலைகளாலும் வழக்கிலிருக்கும் அரிய தமிழ்ச் சொற்களைமீண்டும் பயண்பாட்டிற்கு கொண்டுவருதல் தேவையெனஉணரவேண்டிய தரும் இக்காலகட்டம். இத்தகைய ஆராய்ச்சியில் ஈடுபடுதலும் தேவை.)

 

திகழ்பரத நாடு தமிழர்தம் நாடென

தெள்ளமு தாய்த்தமிழ் புகழ்பாடக் கேட்டு

தினந்தோறும் வருகின்ற நாளெல்லாம் திருநாள்

என்றே அகத்தே உவந்து மகிழ்ந்தார்!

இற்றைத் தலைமுறை இளைஞர் எல்லாம்

இங்கிலீசும் தமிழும் கலந்து பேசுங்கால்

தங்கிலீசு என்னும் மொழியாம் புதுமை

புனைவு எனப்பேசி திரிவதிலோர் நன்மையோ?

 

பிறமொழி கற்பினும் தம்மொழியிற் பேசுவது

போல்தம் உறவுஉணர் வினைகாட்ட இயலுமோ?

இங்கிலீசும் இல்லாது தாய்மொழியும் அல்லாது

பிறமொழிச் சொல்லடுக்கிப் புதுக்கவிதை புதுமொழி

எனக்கூவி பாடினால் இருமொழியும் சாமோ?

 

வேற்றுமொழி கண்டால் ஓடுவதேன் என்று

கேட்கும் அறிவுமூடர் பலருண்டு இந்நாட்டில்

அவர்பால் நாம்மொழிவ தொன்றே ‘பன்மொழி

கற்றகவி பாரதியும் தாகூரும் அவரவர்

தாய்மொழி வளர்ச்சிக்கே யன்றி தம்மொழி

மாய்ந்தொழி வதற்கல்ல” வேயென வாழ்ந்தனர்.

 

வடமொழி அறிந்த பகைவர் சிலரால்

வடமொழி துதிபாடி பெற்ற பதவி

செய்த மோசத்தால் நாட்டில் பிறமொழி

செத்தொழிந் தனவென அயல்நாட்டு ஆராய்ச்சி

செப்புவதை அறியுங்கள்! இருபத் தோராம்

நூற்றாண்டு இளைஞர் ஆய்ந்தறிந்து தெளிந்து

பிறமொழி கலப்பால் அழிந்த தமிழ்க்கலைச்

சொற்பொருள் வழக்கிற் கொண்டு வருதல்

வேண்டும்! அருந்தமிழ் மொழியிற் பெயர்சூட்டி

வரும்தலை முறைக்கும் தமிழின்

பெரும்புகழைப் புகட்டிப் பரவுவதும் கடனே!

 

-இல.பிரகாசம்


இல. பிரகாசம்

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “தமிழ் கலைச் சொற்களை மீட்டெடுத்தல் வேண்டும்! (கவிதை)”

அதிகம் படித்தது