மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

தர்குட் மார்ஷல்

வழக்கறிஞர். ம. வீ. கனிமொழி

Jun 5, 2021

siragu Thurgood-marshall 1

தர்குட் மார்ஷலின் (Thurgood Marshall) 1908ஆம் ஆண்டு பால்டிமோர், மேரிலாண்ட் அமெரிக்காவில் பிறந்தார். அவர் வழக்கறிஞராக, சமூக செயற்பாட்டாளராக, அமெரிக்காவின் உச்சநீதிமன்றத்தின் இணைநீதி அரசராக பணியாற்றியவர் என்பதோடு உச்சநீதிமன்றம் சென்ற முதல் கறுப்பினத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தர்குட் மார்ஷல் நாரா மற்றும் வில்லியம் மார்ஷலின் இரண்டாவது மகன் ஆவார். அவரின் தாயார் ஒரு ஆரம்ப பள்ளி ஆசிரியராகவும், வில்லியம் ஒரு இரயில் போர்ட்டராகவும் பணியாற்றினார்.

பிரவுன் V கல்வி வாரியம் (1954) என்ற வழக்கில் இவர் வாதாடி அமெரிக்கப் பள்ளிகளில் இனப் பிரிவினையை முடிவுக்குக் கொண்டு வந்தார். பிளவுபடுத்துவது கறுப்பினத்தவர்களை மிகவும் தாழ்வாக உணரவைக்கும் என்று அவர் வாதிட்டார்.

இவர் மேரிலாண்ட் சட்டக் கல்லூரியில் சேர்ந்து படிக்க விண்ணப்பித்தபோது இவர் கறுப்பினத்தவர் என்ற காரணத்தினால் அந்த வாய்ப்பு மறுக்கப்பட்டது. பின்பு அவர் Howard University Law School என்ற சட்டக் கல்லூரியில் சேர்ந்து தன்னுடைய சட்டப் படிப்பை 1933இல் அந்த வகுப்பிலேயே முதலாவதாகத் தேறி முடித்தார்.

தன்னுடைய வழக்கறிஞர் பயிற்சியை பால்டிமோரில் தொடங்கிய அவர் Murray v. Pearson (1935) என்ற வழக்கில், எந்த கல்லூரி தன்னை கறுப்பினத்தவர் என்ற காரணத்தினால் சேர்த்துக் கொள்ள மறுத்தது அந்த கல்லூரியின் மீது அது அமெரிக்காவின் 14வது அமெண்ட்மெண்டை மீறும் செய்யல், சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பதை மறுக்கிறது என்று வாதிட்டு வென்றார்.

1936இல், NAACP என்பதின் வழக்கறிஞராக பணியில் சேர்ந்தார். தொடர்ந்து பல்வேறு நிறவேறுபாட்டிற்கு எதிரான வழக்குகளை எடுத்துக்கொண்டு வாதாடி வெற்றியும்பெற்றார்.

1940-50 வரை அமெரிக்காவின் புகழ்பெற்ற வழக்கறிஞராக பணியாற்றினார். அவர் வாதாடிய 32 வழக்குகளில் 29 வழக்குகளில் வெற்றியடைந்து சாதனை செய்தார்.

Smith v. Allwright [1944]),Shelley v. Kraemer [1948],Sweatt v. Painter and McLaurin v. Oklahoma State Regents [both 1950]) போன்ற வழக்குகள் முக்கியமானவை.

1961 ஆம் ஆண்டு அன்றைய அமெரிக்க குடியரசு தலைவர் கென்னடி நியூயார்க் சிட்டியின் செகண்ட் சேர்குட் நீதிமன்றத்தின் நீதியரசராக நியமித்தார். பின் 1965 ஆம்ஆண்டு அமெரிக்காவின் சொலிசிட்டர் ஜெனரலாக குடியரசு தலைவர் ஜான்சன் நியமித்தார்.

அவர் உச்ச நீதி மன்றத்தின் நீதி அரசராக இருந்தபொழுது தூக்குத் தண்டனைக்கு எதிரான ஒரு நிலைப்பாட்டை அவர் கொண்டிருந்தார். குறிப்பாக Furman v. Georgia வழக்கில் மரண தண்டனைக்கு எதிராக அவர் வாதிட்டார்.

சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்று, நிறபேதத்தை ஒழிக்கக் கூடிய வகையிலே தான் அவருடைய தீர்ப்புகளும் அவர் வாதாடிய வழக்குகளும் இருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

மார்ஷல் January 24, 1993, மேரிலாண்டில் இயற்கை எய்தினார்.


வழக்கறிஞர். ம. வீ. கனிமொழி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “தர்குட் மார்ஷல்”

அதிகம் படித்தது