மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

தலையங்கம் – ஐந்தாம் ஆண்டில் நுழையும் உங்கள் சிறகு



May 17, 2015

thalayangam1சிறகு இணைய இதழ் வெற்றிகரமாக ஐந்தாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. 2011ம் ஆண்டு மே 17ம் நாள் அன்று தொடங்கப்பட்ட நமது இதழ் பல்வேறு சவால்களையும், சோதனைகளையும் எதிர்கொண்டு, தமிழருக்கு செம்மையான பணியை செவ்வனே செய்து கொண்டிருக்கிறது. பொருளாதாரப் பின்புலம் எதுவும் இன்றி நிறுவனர்களின் நன்கொடையை மட்டுமே நம்பி சிறகு நடந்து வருகிறது. இருப்பினும் கொண்ட கொள்கை எதுவும் மாறாமல் வாசகர்களுக்கு அறிவார்ந்த அடிப்படையில் வெளியீடுகள் செய்துவருகிறது. தமிழறிஞர்களின் படைப்புகளையும், நேர்மையான களச்செயற்பாட்டாளர்களின் நேர்காணல்களையும், புதிய எழுத்தாளர்களின் படைப்புகளையும் வழங்கி வருவதில் சிறகு பெருமை கொள்கிறது. இன்றைய நாளில் தமிழ் மக்களுக்கு தேவைப்படும் பல்வேறு வகையான தலைப்புகள் சார்ந்து கட்டுரைகள், செய்திகள் போன்றவை வழங்கப்படுகிறது.

இனிவரும் காலங்களில் வெளிச்சம் படாத செயற்பாட்டாளர்கள், கலைஞர்கள், படைப்பாளிகள், எழுத்தாளர்கள் போன்றோருக்கு உரிய சிறப்பினை பெற்றுத்தரும் வகையில் நமது இதழின் செயல்பாடு இருக்கும். தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்களையும் சார்ந்த செய்திகளையும், விவசாயம் தொடர்பான கட்டுரைகளையும், கல்வி தொடர்பான கட்டுரைகளையும், நேர்காணல்களையும் தொடர்ந்து வெளியிட திட்டமிடப்பட்டு வருகிறது.

சிறகின் வெற்றிப் பயணத்திற்கு உதவி புரிந்து வரும் வாசகப் பெருமக்களுக்கும், படைப்பாளிகளுக்கும் இதயம் கனிந்த நன்றியை இவ்விதழ் உரித்தாக்குகிறது. தமிழ் வளரவும், தமிழர் மேன்மையுறவும் தொடர்ந்து பாடுபடுவோம், நன்றி!




இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “தலையங்கம் – ஐந்தாம் ஆண்டில் நுழையும் உங்கள் சிறகு”

அதிகம் படித்தது