மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

தாக்குதல் நடைபெற்ற காஷ்மீரில் அமைதி திரும்பி, மாணவர்களுக்கான பொதுத்தேர்வு தொடங்கியது



Nov 14, 2016

காஷ்மீரில் புர்கர் வாணி சுட்டுக்கொலை செய்யப்பட்டதிலிருந்து அங்கு வன்முறை வெடித்தது. இச்சம்பவத்தினால் நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர், ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இக்கலவரத்தில் பத்துக்கும் மேற்பட்ட பள்ளிகள் எரிக்க்கப்பட்டன.

siragu-exam-in-kashmir

இக்கலவரத்திலிருந்து காஷ்மீர் தற்போது அமைதி நிலைக்குத் திரும்பியுள்ளது. இதைத்தொடர்ந்து 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு தொடங்கியுள்ளது. ஏற்கனவே கலவரம் நடந்ததால் பலத்த பாதுகாப்புகளுடன் தேர்வு நடைபெற்று வருகிறது.

கடந்த ஜூலை மாதம் முதல் கலவரம் நடைபெற்று வந்ததால் கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டிருந்ததால் பாடங்கள் முழுமையாக நடத்தப்படவில்லை. எனவே மாணவர்களுக்கு அவர்களுடைய பாடத்திலிருந்து 50 சதவிகிதம் மட்டுமே தேர்வுக்கான பகுதியாக இருக்கும் என மாநில கல்வி அமைச்சகம் அறிவித்துள்ளது.




இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “தாக்குதல் நடைபெற்ற காஷ்மீரில் அமைதி திரும்பி, மாணவர்களுக்கான பொதுத்தேர்வு தொடங்கியது”

அதிகம் படித்தது