மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

திமுக தலைவர் கருணாநிதி உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதி



Dec 16, 2016

நீர்ச்சத்து மற்றும் ஊட்டச்சத்து குறைபாடு காரணமாக டிசம்பர் 1ம் தேதி சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்று டிசம்பர் 7ம் தேதி வீடு திரும்பினார். அவர் ஓய்வு எடுக்க மருத்துவர்கள் வலியுறுத்தினர்.

siragu-karunanidhi

இந்நிலையில் கருணாநிதிக்கு சுவாசக்கோளாறு ஏற்பட்டதையடுத்து நேற்று இரவு 11 மணியளவில் மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

நுரையீரல் மற்றும் தொண்டை தொற்று காரணமாக சுவாசக்கோளாறு ஏற்பட்டுள்ளது, சிகிச்சை தொடர்ந்து அளிக்கப்பட்டு வருகிறது. தற்போது அவரது உடல்நலம் சீராக இருப்பதாக காவேரி மருத்துவமனை மருத்துவர்கள் அறிக்கை வெளியிட்டுள்ளனர். தற்போது ஸ்டாலின், கனிமொழி, துறைமுருகன் ஆகியோர் மருத்துவனையில் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.




இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “திமுக தலைவர் கருணாநிதி உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதி”

அதிகம் படித்தது