மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

தேர்தல் ஆணையம்: இடைக்கால பொதுச்செயலாளரை நியமிப்பதற்கான வழிகள் அதிமுக சட்ட விதிகளில் இல்லை



Feb 8, 2017

சசிகலா அதிமுக-வின் பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டார். இந்நிலையில் சசிகலா பதவியேற்றதை எதிர்த்து சசிகலா புஷ்பா மற்றும் சிலர் தேர்தல் ஆணையத்தில் புகார் தெரிவித்தனர்.

Siragu sasikala

இதனை ஆராய்ந்த தேர்தல் ஆணையம் அதிமுக சட்ட விதிகளின் படி இடைக்கால பொதுச்செயலாளரை நியமிக்க வழிகள் இல்லை என்று கூறியதுடன், சசிகலாவுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது தேர்தல் ஆணையம்.

ஒருவரை பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்க வேண்டுமென்றால், பொதுக்குழு உறுப்பினர்கள் மட்டுமல்லாது அதிமுக உறுப்பினர்களும் சேர்ந்து ஓட்டுபோட்டு தேர்வு செய்தல் வேண்டும்.

இடைக்கால பொதுச்செயலாளரை தேர்ந்தெடுக்க வேண்டும் என்றால் அதிமுக-வின் சட்டவிதிகளில் உரிய திருத்தம் செய்ய வேண்டும் என்று தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவிக்கிறது. எனவே சசிகலா பொதுச்செயலாளரானது செல்லாது என்று தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவிக்கிறது.




இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “தேர்தல் ஆணையம்: இடைக்கால பொதுச்செயலாளரை நியமிப்பதற்கான வழிகள் அதிமுக சட்ட விதிகளில் இல்லை”

அதிகம் படித்தது