மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

தேர்தல் ஆணையம்: ஏப்ரல் 24ம் தேதிக்குள் உள்ளாட்சித் தேர்தலை நடத்த முடியாது



Mar 17, 2017

தமிழகத்தில்உள்ள நகராட்சி மற்றும் மாநகராட்சி போன்ற உள்ளாட்சி அமைப்புகளின்பதவிக்காலம் சென்ற வருடம் அக்டோபர் 24ம் தேதியுடன் முடிவடைந்தது.இதையடுத்து உள்ளாட்சி அமைப்புகளுக்கு அக்டோபர் 17, 19 ஆகிய தேதிகளில்தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது.

siragu-chennai-highcourt

வேட்புமனுதாக்கல் செய்யப்பட்டதில் இட ஒதுக்கீடு பின்பற்றவில்லை என்று திமுக சென்னைஉயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததையடுத்து டிசம்பர் 31க்குள் உள்ளாட்சித்தேர்தலை நடத்த வேண்டும் என்றுஉத்தரவிட்டது.

மீண்டும் இவ்வழக்கு விசாரணைக்கு வந்தபோது, மாநில தேர்தல் அதிகாரிகள் உள்ளாட்சித் தேர்தலை மே 15 க்குள் நடத்தமுடிவு செய்துள்ளதாக தெரிவித்தனர். ஆனால் தமிழக அரசு அதற்கான வேலையில் ஈடுபடவில்லை.

பின் ஏப்ரல் 24ம் தேதிக்குள் உள்ளாட்சித் தேர்தலை நடத்த தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட வேண்டும் சென்னை உயர்நீதிமன்றத்தில் சமூக ஆர்வலர் பாடம் நாராயணன் வழக்கு தொடர்ந்தார்.

ஏப்ரல் 24ம் தேதிக்குள் உள்ளாட்சித் தேர்தலை நடத்த இயலாது என்றும், நீதிமன்ற உத்தரவின்படி மே 14ம் தேதிக்குள்ளும் உள்ளாட்சித் தேர்தலை நடத்த இயலாது என்றும் தேர்தல் ஆணையம் பதில் அளித்துள்ளது.

இந்த பதிலுக்கு குறிப்பிட்ட தேதிக்குள் ஏன் தேர்தலை நடத்த முடியாது என்பதற்கான விளக்கத்தை ஏப்ரல் 3க்குள் அளிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.




இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “தேர்தல் ஆணையம்: ஏப்ரல் 24ம் தேதிக்குள் உள்ளாட்சித் தேர்தலை நடத்த முடியாது”

அதிகம் படித்தது