மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

தேர்தல் ஆணையம்: ஜூலை மாதத்திற்குள் தமிழக உள்ளாட்சித் தேர்தல்



Apr 24, 2017

தமிழகத்தில் உள்ள நகராட்சி மற்றும் மாநகராட்சி போன்ற உள்ளாட்சி அமைப்புகளின் பதவிக்காலம் சென்ற வருடம் அக்டோபர் 24ம் தேதியுடன் முடிவடைந்தது. இதையடுத்து உள்ளாட்சி அமைப்புகளுக்கு கடந்த அக்டோபர் 17, 19 ஆகிய தேதிகளில் தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது.

Siragu-tamil-nadu

வேட்புமனுதாக்கல் செய்யப்பட்டதில் இட ஒதுக்கீடு பின்பற்றவில்லை என்று திமுக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததையடுத்து டிசம்பர் 31க்குள் உள்ளாட்சித் தேர்தலை நடத்த வேண்டும் என்று உத்தரவிட்டது. தேர்தல் ஆணையம் கால அவகாசம் கோரியது. இதனையடுத்து மே 14க்குள் தேர்தலை நடத்த வேண்டும் என்று உத்தரவிட்டது.

நீதிமன்ற உத்தரவின்படி மே 14ம் தேதிக்குள்ளும் உள்ளாட்சித் தேர்தலை நடத்த இயலாது என்றும் தேர்தல் ஆணையம் பதில் அளித்துள்ளது.

பின் இவ்வழக்கின் விசாரணையில், வாக்காளர் பட்டியல் தயாரிக்கும் பணி காரணமாக மே 14க்குள் உள்ளாட்சித் தேர்தலை நடத்த இயலாது என்றும் அதற்காக கால அவகாசம் அளிக்க வேண்டும் என்றும் தேர்தல் ஆணையம் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளது.

இந்நிலையில் உள்ளாட்சித் தேர்தலை நடத்துவதற்கான வேலைகளை தேர்தல் ஆணையம் தொடங்கவில்லை என்று திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இவ்வழக்கின் விசாரணை இன்று நடைபெற்றது. அதில் ஜூலை மாத இறுதிக்குள் தமிழக உள்ளாட்சித்தேர்தல் நடத்தப்படும் என்று தமிழக தேர்தல் ஆணைய செயலாளர் ராஜசேகர் உறுதி அளித்துள்ளார்.

இவ்வழக்கின் விசாரணை மீண்டும் இன்று நடைபெற்றது. அதில் உள்ளாட்சித் தேர்தலை ஆறு மாதத்திற்குள் நடத்த வேண்டும் என்று பாடம் நாராயணன் தொடர்ந்த வழக்கை அடுத்து, தேர்தல் ஆணைய செயலாளர் ராஜசேகரன் பதில் மனுவை தாக்கல் செய்தார்.

ஜூலை மாதத்துக்குள் உள்ளாட்சித் தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் தயாராக உள்ளது. வேட்பாளர்களின் குற்றப்பின்னணியை அறிய சட்டம் இயற்ற வேண்டும், சுழற்சி முறையிலான இட ஒதுக்கீட்டுக்கு தமிழக அரசு ஏற்பாடு செய்ய வேண்டும் உள்ளிட்டவற்றை தமிழக அரசு ஏற்பாடு செய்த பின்பு இத்தேர்தலை நடத்த தயாராக உள்ளது என்று அம்மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது. இதையடுத்து இவ்வழக்கை 26ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டது.




இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “தேர்தல் ஆணையம்: ஜூலை மாதத்திற்குள் தமிழக உள்ளாட்சித் தேர்தல்”

அதிகம் படித்தது