மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

தொகுப்பு கவிதை (அறியாமையை நீக்கிய ‘மழை’, நகர்வு)

தொகுப்பு

Jan 12, 2019

அறியாமையை நீக்கிய ‘மழை’

  ‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌                                                                -  அனஸ் ஹக்கீம்

siragu mazhai1வேரற்ற பூமியின் வேதனைக் கண்ட

வேலியற்ற வானத்தின் அழுகைக் கண்ணீர் மழையே! – உன்னை

அழகற்றத் தோட்டத்தின் அழகிலாமை நீக்க

பரித்து வீசிய பஞ்சபூத்ததின் மு த்தெனவென்றி-நான்

துக்கமற்ற இமையுடன் துயரமற்ற உள்ளத்துடன்

தூக்கத்தில் தொங்கினேன்- மழையே! நீ என் நண்பன்

பதிவற்ற ஒலியின்,அபாயத்தை யறிந்து

பதற்றமுள்ள உள்ளத்துடன் எழுந்த என் மனம்

பிரிவற்ற காதலர்களின்,பதிவேற்ற விவகாரத்தை- யறிய- உன்

இயல்பற்ற செயல்களில் இறங்கி இறக்கமற்றதானது!- நீ  -என் பகைவன்

ஆனால்,மனிதத்தன்மை எவ்வாறோ அவ்வாறே உன்- இயல்பென்றறிய நான் மறந்ததேனோ!!

நகர்வு

முனைவர் ஆ.சந்திரன்

 

siragu nagarvu1

மலைமுகட்டில் விபத்திற்குள்ளாகும்

மழைக்கூட்டத்தின் பாகங்கள்

தாழ்பாளற்ற கதவுகளில் பெருக்கெடுத்து

விழிப்பின் பெருவெளிமுன் பூதாகரமாக விரியும்!

நிழலில் இருப்புக் கொள்ளும்

கருந்திட்டுக்களின் வெடித்துச் சிதறிய வெண்துளிகள்

அண்மித்த வேளையில்

நாசியின் துவாரங்கள் விழிப்புக்கொள்ளும்

கீழ்த்திசை உவர்ப்பில் மூழ்கி

தலையைத் துவட்டிய ஈரம்புலராத விளிம்பினாதியின்

கரங்களின் அரவணைப்பில்

நுதலொளிக்காய் காத்துநின்றவன்

வான்விழுதாய் வியாபிக்க

கரங்களில் தண்துளிகள் இருப்புக்கொள்ள

பாலபாடம் கற்கும் நினைவுமழலைகள்

கால்களைப் பிணைத்திருந்த பாசிசத்தின்

விழிவெளிகொள் வேட்கை தீர

நீர் வேட்டைக்குப் புலம்பெயர்ந்தன!

 

 


தொகுப்பு

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “தொகுப்பு கவிதை (அறியாமையை நீக்கிய ‘மழை’, நகர்வு)”

அதிகம் படித்தது