மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

ஊசி போட்டுக்கோ அம்மு (கவிதை)

இல. பிரகாசம்

Aug 3, 2019

 

siragu oosi pottukko1

ஊசியை போட்டுக் கொள்

வேண்டாம்.

போட்டுக் கொண்டால் தான் சரியாகும்.

வலிக்குமே.

வலிக்காது அம்மு நான் இருக்கிறேன்

வேண்டாம்.

நான் போட்டுக் கொள்ளட்டுமா?

வேண்டாம். உனக்கு வலிக்கும்ல

முதலில் நான் போட்டுக் கொள்கிறேன் அப்புறம் நீ

ம்…

ஒரு ஊசி கூர்மையானதாக இருந்தது

குத்தப்பட்டதாக சொல்லப்பட்ட இடத்தில்

அதற்கான தடயங்களோ, வலித்ததற்கான ஒலிகளோ எழவேயில்லை.

ஏனெனில் போலியாய் ஒரு ஊசிக் குத்தல்

பிறகு எப்படி ‘உண்மையில்’ வலிக்கும்.

 


இல. பிரகாசம்

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “ஊசி போட்டுக்கோ அம்மு (கவிதை)”

அதிகம் படித்தது