மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

தொகுப்பு கவிதை (காவிரிக்கு வாழ்த்து!, ‘மியாவ்’ வேட்டை, என் தோட்டத்துப் பூக்கள்)

தொகுப்பு

Sep 8, 2018

காவிரிக்கு வாழ்த்து!

            -இல.பிரகாசம்

siragu kaaviri1

 

பொய்யா வானம் பொழிய வந்தாய்
கொழிக்கும் வளந்தனை அளிக்க வேநீ
குடகு மலைதனைத் தாண்டித் தவழ்ந்து
நடந்து வந்தாய் காவேரி! அணங்கே!
நாளும் நின்பதம் நிலமிசைத்
தவழ குலம்விளங்கும்! வாழிநீ!வா ழியவே!

(03.08.18-திருச்சியில் நடைபெற்ற ஆடிப் பெருக்கு நாளில்
காவிரி நதியின் வருகையை வாழத்த்திப் பாடப்பட்டது.
96 வருடங்களுக்குப் பின் கல்லனை அணை நிரம்பி வழிந்தோடியது.)

‘மியாவ்’ வேட்டை

-இல.பிரகாசம்

அலமாரியில் அடுக்கிவைக்கப்பட்ட புத்தகங்கள்
அவற்றின் சில பக்கங்கள் சிதைக்கப்ட்டிருந்தன.
அவைகளில்
நான் விரும்பிப் படித்த கவிதைகள்
தேடித் திரிந்து சேகரித்த வரலாற்றுப் புத்தகங்கள்
இன்பம் துய்க்க வாசித்த நாவல்கள்
எல்லாம் இரையாகியிருந்தது கண்டு உள்ளம் பதறினேன்

கைகள் கொலைசெய்ய துடித்துக் கொண்டிருந்தது
மிருக மனம்(புத்தகம் படித்தா?) தோன்றியது
வெளியே சென்றேன்
‘மியாவ்’ ஒலி எழுப்பும் பூனையை அழைத்து வந்தேன்
கொலைசெய்ய
இரண்டொரு நாள் வேட்டை
சில தப்பிச்செல்ல முயன்றன
கதவைத் தாழிட்டேன்
சிரித்தேன்
‘மியாவ்’வும் சிரித்தது.

இப்போது தாழிடப்பட்ட
கதவின் அருகில் நின்ற ‘மியாவ்’
கூரிய நகத்தை சதைக்குள்ளியிருந்து நீட்டியது
இருள் தந்த பசியின் வேட்டை.

நானும் ‘மியாவ்’ குரலில்
‘மியாவ் மியாவ்’..

என் தோட்டத்துப் பூக்கள்

-மீனாட்சி சுந்தரமூர்த்தி

 

siragu thuppuravu tholilaali1

 

மல்லிகை

அன்று வெள்ளிக்கிழமை
விடைத்தாள்
திருத்தும் மையம்
செல்ல
அவசரமான எண்ணெய்க்
குளியல்.

மேசையில் தோடு,மூக்குத்தி
மோதிரம்
நாட்காட்டித் தாளில்
சுற்றி,

வீதியில்  வண்டி:
ஜோதி
குரல் கொடுக்க
என்னவர்
குப்பையென நினைத்து
இதனையும்
சேர்த்தளிக்க,

வீட்டைப் பூட்டும்முன்
மேசையில்
தேட அம்பலமானது
செய்தி,

வைரங்கள் மனதை
அறுக்க
மையத்தில் நான்.

குற்றவுணர்வில்
வண்டியைத்தேடி
இவர்,
அங்கே இங்கே
விசாரித்து
குப்பைகள்கொட்டுமிடம்
சேர்ந்து

ஜோதியிடம் சொல்ல
மூன்று பெண்டிர்
தேடியலசல்.

இறுதியில் செல்வாம்பாள்
கண்டெடுத்து
என்னவரிடம் தர
நெகிழ்ந்து அவள் கரம்
பற்றிக்
கொண்டாராம்
விழிகளில்
நீர்க்கோலமிட.

செய்யும் தொழில்
ஊரைச்
சுத்தப்படுத்தல்.
உடையில் வீசலாம்
முடை  நாற்றம்
இவர்கள்
மனமெல்லாம்
மல்லிகையின்
வாசம்.

 


தொகுப்பு

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “தொகுப்பு கவிதை (காவிரிக்கு வாழ்த்து!, ‘மியாவ்’ வேட்டை, என் தோட்டத்துப் பூக்கள்)”

அதிகம் படித்தது