மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

செப்புச் சிமிழ்களே…(கவிதை)

தொகுப்பு

Oct 17, 2020

செப்புச் சிமிழ்களே…

-வழக்கறிஞர் ம.வீ. கனிமொழி

 

 

siragu nurse1
சேவையின் உருவங்களே அன்பின் தங்கங்களே
கொரோனா நெருக்கடியில் ஆருயிர் காப்போர்களே
தன்னுயிர் போற்றும் தன்னலம் மறந்து
பொதுநலம் காக்கும் தூரிகை ஓவியங்களே
உறக்கம் துறந்து தொண்டாடும் உள்ளங்களே
உதிரச் சொந்தம் மறந்து களமாடும்
ஊக்கங்களே  கனிந்த பார்வை காரிகைகளே
அருவருப்பின்றி நேசம் தூவும்  தூவானமே
தாயின் உருவாய் நோய்த் தீர்க்கும்
தாரகைகளே கொடுந் தொற்று ஒழிக்க
உலாவரும் அர்ப்பணிப்பு பிறை நிலவுகளே
உயிரணையாது தேற்றும்  செப்புச் சிமிழ்களே
செவிலியர்களே வாழ்க நீவிர்!!



தொகுப்பு

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “செப்புச் சிமிழ்களே…(கவிதை)”

அதிகம் படித்தது