மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

தொகுப்பு கவிதை (தமிழ் நூல்கள் வாசிப்பு!, பெண்.. ஆண்.. பேண்!)

தொகுப்பு

Jul 7, 2018

 

தமிழ் நூல்கள் வாசிப்பு!

- இல.பிரகாசம்

 

Dec-23-2017-newsletter1

தேனொக்கும் தெள்ளு தமிழ்நூல்

படித்தால் இனிக்கும்!

தேனொக்கும் சுவைதான் ஏறும்

இசையமு தூற்றெடுக்கும்!

தேன்சொட்டும் தமிழிசை உள்ளத்துள்

அமுதுமழை பொழியும்!

தேன்மழைபோல் தமிழ்பா மழைபொழிய

உயிரெல்லாம் இனிக்கும்!

 

தாயெழிற் றமிழின் நூலில்

இல்லாதன என்ன?

தாய்தமிழ் அழகுக்கு குறள்வாக்கு

ஒன்றே சான்று!

நோய்போக்கு மருந்து கண்டதும்

நந்தமிழ் நூல்களே!

வாய்மை எனும்பண்பு போற்றி

வளர்த்ததும் தமிழே!

 

தண்டமிழ் வாசம் இன்றி

வாழ்வது தகுமோ?

ஒண்டமிழ் மொழியின் வளர்ச்சிக்கு

பணிசெய்வது கடமை!

பண்டுபுகழ் பெற்றமொழி காக்க

உழைப்பது கடமை!

தொண்டுசெய் தாய்மொழி வாழ!

தமிழினம் வாழவே!

 

பெண்.. ஆண்.. பேண்!

- மகேந்திரன் பெரியசாமி

 Siragu pudhiya paadhai1

சமூகம்

செழித்துத்

சிறக்கப்

பறக்கச்

சிறகுகள்

தேவை!

 

ஒருசிறகு

ஆண்-

மறுசிறகு

பெண்!

 

ஒருங்கி

உயர

உலகை

உயர்த்த-

வேட்கை

கொள்வோம்!

பெண்மையைப்

போற்றி

ஆற்றலைப்

பெருக்குவோம்!

 

ஒரேபார் (உலகு)-

ஒருபகுதிபெண்-

மறுபகுதிஆண்!

 

ஒரே

பார்வை-

ஒருவிழி

பெண்;

மறுவிழி

ஆண்!

 

விண்ணின்உயரம்

மண்ணின்ஆழம்

இணைந்து

அறிவோம்!

 

இணைந்து

பறப்போம்;

இடர்களைக்

களைவோம்!

 

நீயும்

நானும்

நாமாகி-

நாமும்

நிமிர்வோம்-

நம்பிக்’கை’ கோர்த்து

நுதல்நிமிர்த்தி- நம்

நற்புவிகீர்த்தி

நிமிர்த்துவோம்!

 

ஆம்

சமூகமே,

ஆண்..

பெண்

பேண்!

 


தொகுப்பு

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “தொகுப்பு கவிதை (தமிழ் நூல்கள் வாசிப்பு!, பெண்.. ஆண்.. பேண்!)”

அதிகம் படித்தது